Reading Time: < 1 minute

கனடிய அரசால் முன்வைக்கப்பட்டுள்ள, துப்பாக்கிகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலம், அவற்றை தடை செய்வதற்கான அதிகாரத்தை உள்ளூராட்சிகளுக்கு வழங்குமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கைத்துப்பாக்கிகளை வைத்திருத்தல், எடுத்துச்செல்லல் போன்றவற்றுக்கான இறுக்கமான விதிமுறைகளின் ஊடாக, இந்த அதிகாரம் வழங்கப்படும் எனவும், கடுமையான தண்டனைகள் மூலமாக, அதற்கு வலுச்சேர்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறை தண்டனையும் இவற்றில் அடங்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத துப்பாக்கிகளை கனடாவிலிருந்து அகற்றுவதற்கான மேலதிக பலத்தினை, போலீசாருக்கும் எல்லை பாதுகாப்பு பிரிவினருக்கும் இந்த சட்டமூலம் வழங்குமென்றும், துப்பாக்கிகளை கடத்துவதற்கான குற்றவியல் தண்டனைகளை அதிகரிக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை எதிர்வரும் மாதங்களில் தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை மீளக் கொள்வனவு செய்யும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று அறிவித்தார்.