Reading Time: < 1 minute

சிறப்பு கான்ஸ்டபிளைத் துப்பிவிட்டு உதைத்ததாக பீட்டர்பரோவில் பிராம்ப்டனைச் சேர்ந்த சேரன் காசிலிங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை பிப்ரவரி 20 ஆம் தேதி பீட்டர்பரோவில் நெடுஞ்சாலை 7 இல் உள்ள ஒரு எரிவாயு நிலையத்தில் ஒரு வாடிக்கையாளர் குழப்பம் விளைவிப்பதான தொலைபேசி அழைப்பின் பேரில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்கு அமைதியை மீறுவதான குற்றச்சாட்டில் 39 வயதான சேரன் காசிலிங்கம் கைது செய்யப்பட்டார்

அதிகாரிகள் வந்தபோது, ​​குற்றம்ச்சாட்டப்பட்ட நபர் எப்படி அங்கு சென்றார் அல்லது அவர் எங்கு செல்ல விரும்பினார் என்பது பற்றிய தகவல்களை வழங்காத நிலையில் அவரை கைதுசெய்ய நேரிட்டதாகவும், அந்த சமயத்தில் அவர் கிளர்ந்தெழுந்து காவலரை உதைத்து துப்பியதாக இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை அடுத்த மாதம் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவுள்ளார்.

https://www.insauga.com/brampton-man-faces-two-counts-of-assault-after-allegedly-kicking-and-spitting-at-peterborough-cop