முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை பெற்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு Quebec மாகாணம் மூன்றாவது தடுப்பூசியை வழங்கவுள்ளது.
AstraZeneca தடுப்பூசியைப் பெற்ற முழு தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் பயணம் செய்வதற்கு முன் mRNA தடுப்பூசியை மூன்றாவதாக பெறலாம் என Quebec அரசாங்கம் அறிவித்தது. Serum Institute of Indiaவில் தயாரிக்கப்பட்ட AstraZeneca தடுப்பூசியை சில நாடுகள் அங்கீகரிக்காததால் இந்த முடிவை Quebec மாகாண பொது சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.
ஆனால் Pfizer அல்லது Moderna தடுப்பூசியை மூன்றாவதாக பெறுவதற்கு முன்னர் ஆலோசனை பெறுவது மற்றும் அபாயங்களை எடைபோடுவது அவசியம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், Quebec முதல்வர் இன்று கூடுதல் COVID விதிகளை தளர்த்துவதாக அறிவித்தார். Quebec மாகாணத்தில் திங்கட்கிழமை 75 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின.