Reading Time: < 1 minute

அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை தொடர்ந்து பயன்படுத்தும் கனடாவின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரத்தம் உறைதல் சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தத் தடுப்பூசி போடும் பணிகளை இடைநிறுத்தியுள்ளன.

எனினும் இரத்தம் உறைதல் சிக்கலுடன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்குத் தொடர்புள்ளதாக எந்த ஆதாரங்களும் இதுவரை இல்லை என என ஹெல்த் கனடா கூறியுள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா -கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கனடா பெற்றுள்ளது. அத்துடன், 15 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா -கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மே மாதத்துக்குள் கனடா பெறவுள்ளது.

சர்வதேச மருந்துக் கட்டுப்பாட்டாளர்களுடனும், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி உற்பத்தியாளருடனும் ஹெல்த் கனடா தொடர்ந்து தொடர்பில் உள்ளது. இந்தத் தடுப்பூசியால் இரத்தம் உறைதல் சிக்கல் ஏற்படுவதாக ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால் இந்த தடுப்பூசி பயன்பாடு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் ஹெல்த் கனடா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.