செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மோசடியில் சிக்கி 2 கனடிய பிரஜைகள் பெருந்தொகை பணத்தை இழந்துள்ளனர்.
ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த இருவர் இவ்வாறு பெருந்தொகை பணத்தை இழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இடப்பட்ட சமூக ஊடக பதிவுகள் மற்றும் விளம்பரங்களை நம்பி இவர்கள் ஏமாந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரும் மொத்தமாக 2 லட்சத்து 30 ஆயிரம் டாலர்கள் இழந்துள்ளனர்.
கிரிப்டோ கரன்சி முதலீட்டு திட்டத்தில் இணைத்துக் கொள்வதாக தெரிவித்து இந்த மோசடி இடம் பெற்றுள்ளது.
உலகின் முதல்நிலை செல்வந்தர்களில் ஒருவரான எலோன் மாஸ்க் போன்றவர்கள் தோன்றி முதலீடு செய்யுமாறு கூறும் காணொளிகள் வெளியிடப்பட்டு ஏமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்யுமாறு கூறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடியில் சிக்கி ஒன்றரியோவை சேர்ந்த இருவர் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் டாலர்களை இழந்துள்ளனர்.
உலகப் பிரபலங்கள் பரிந்துரை செய்வது போல் செயற்கையின் நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டீப் ஃபேக் காணொளிகள் வெளியிடப்படுவதாகவும் இதன் ஊடாக இவ்வாறு பலர் மோசடிகள் சிக்கிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.