டொரண்டோவின் எடோபிகோக் (Etobicoke) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நவம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4:27 மணியளவில் Rathburn Road மற்றும் The East Mall சந்திப்புக்கு அருகே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மிசிசாகாவைச் சேர்ந்த 18 வயதான Malik Abass என டொரண்டோ பொலிஸார் நவம்பர் 8ஆம் தேதி உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும், கருமையான ஆடைகளை அணிந்திருந்த இரு ஆண்களைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.
இது 2026ஆம் ஆண்டில் டொரண்டோவில் பதிவான 33ஆவது கொலைச் சம்பவமாகும். சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 416-808-7400 என்ற எண்ணில் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.