Reading Time: < 1 minute

ஸ்பெயின் ரயில் விபத்தில், கனேடியர் ஒருவர் பலியானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Tamil Business Directory

ஸ்பெயினையே அதிரவைத்த அதிவேக ரயில் விபத்தில் கனேடியர் ஒருவர் பலியானது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஸ்பெயின் நாட்டில், கடந்த புதன்கிழமை காலை, அதிவேக ரயில் ஒன்று, நின்றுகொண்டிருந்த ரயில் ஒன்றின் மீது மோதியதில் வெளிநாட்டவர்கள் உட்பட 69 பேர் கொல்லப்பட்டார்கள், 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

இந்நிலையில், பலியானவர்களில் கனேடியர் ஒருவரும் உள்ளதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், ஆறு கனேடியர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில், காணாமல் போன அந்த நபரைத்தான் ஸ்பெயின் அதிகாரிகள் உயிரிழந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்களா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

Comments are closed, but trackbacks and pingbacks are open.