Reading Time: < 1 minute

கனடாவின் லண்டன் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியர் மீது, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனது மாணவியை தகாத முறைக்கு உட்படுத்தியதாக அதிர்ச்சி வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.

Tamil Business Directory

லண்டனில் உள்ள ‘சென்ட்ரல் செகண்டரி’ மேல்நிலைப் பள்ளியில் 1985–1986 காலகட்டத்தில் உயிரியல் ஆசிரியராகவும் நீச்சல் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர் முர்ரே மெக்டொனால்ட். இவர் மீது, அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவி ஒருவர் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

தற்போது 50-களின் மத்தியில் இருக்கும் அந்தப் பெண், நீதிமன்றத்தில் கண்ணீர்மல்க சாட்சியமளித்துள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் தனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிட்டதாகக் கூறிய அப்பெண், “பெற்றோரிடமோ அல்லது பள்ளியிலோ கூறினால் என் மீதே தவறு சுமத்தப்படும் என்று அஞ்சி யாரிடமும் சொல்லவில்லை.

என் கனவுகள் அனைத்தும் சிதைந்துபோயின. அதன்பின் நான் நீச்சல் பயிற்சிக்குச் செல்லவே இல்லை; எனது வாழ்வின் ஒரு பத்தாண்டுகளை இந்த அதிர்ச்சியிலேயே இழந்துவிட்டேன்” எனக் கூறினார்.

நீண்ட ஆண்டுகள் கழித்து, 2024-ஆம் ஆண்டில் ஆசிரியர்கள் கல்லூரிப் பதிவேட்டின் மூலம் மெக்டொனால்டை அடையாளம் கண்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தற்போது 68 வயதாகும் இந்த ஓய்வுபெற்ற ஆசிரியர், தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்து குற்றவாளி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

வழக்குரைஞர்கள் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண் மட்டுமே முதன்மைச் சாட்சியாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த அதிர்ச்சி வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.