கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள பழங்குடிப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எல்சிபோக்டோக் குதியில் 21 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையதாக, ஒட்டாவாவைச் சேர்ந்த 27 வயது நபர் மீது கடந்த சனிக்கிழமையன்று முதற்கட்ட கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த 27 வயது நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் நகருக்குச் செல்லும் விமானத்தில் ஏறத் தயாராக இருந்தபோது, வெள்ளிக்கிழமையன்று மாண்ட்ரீல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர் மேனிடோபாவில் இருந்து நியூ பிரன்சுவிக்கிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக எல்சிபோக்டோக் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமையன்று மாங்கடன் மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவர் மீது கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமையன்று நள்ளிரவு 2:30 மணியளவில் சந்தேக நபரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டபோது, இப்பகுதி மக்களுக்காகத் துப்பாக்கிச் சூட்டு எச்சரிக்கையை பொலிஸார் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.