கனடாவுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி விதிப்புக்கள் தொடர்பில் குடியரசுத் கட்சியின் செனட் வேட்பாளரான மைக் ரோஜர்ஸ் ட்ரம்ப்பின் வர்த்தகக் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.
கனடா – அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போரினால் மிச்சிகன் மாகாணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் புதன்கிழமை வெளியிட்ட தேர்தல் பிரசார விளம்பரத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மிச்சிகன் மக்களுக்குக் கனடா நமது எதிரி அல்ல என்பது நன்றாகத் தெரியும். இந்த வரிகளுக்கான போரை நாம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான மைக் ரோஜர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இந்த விளம்பரத்தில் டொனால்ட் ட்ரம்ப்பின் பெயரைக் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், வர்த்தக வரிகள் அவசியம் என்று முன்பு கூறிவந்த அவரது நிலப்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், மிச்சிகன் மேலவை இடத்திற்கு மைக் ரோஜர்ஸுக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான அப்துல் எல்-சையதுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஒன்டாரியோ ஏரியின் பெயரை ‘லார்ட் அமெரிக்கா’ என மாற்றும் உத்தரவில் கையெழுத்திட்ட ட்ரம்ப், கனடா பொருட்கள் மீது 50 சதவீத வரிகளை விதித்தார். அதற்குப் பதிலடியாகக் கனடாவும் வரிகளை உயர்த்தியது.
அண்மையில் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள், சக்கரப் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.
கனடாவுடனான எல்லையில் அமைந்துள்ள மிச்சிகன் மாகாணத்தின் பொருளாதாரம், முக்கியமாக வாகன உற்பத்தித் துறை, கனடாவின் வர்த்தகத்துடன் பெரிதும் பிணைந்துள்ளது.
இதனால் இந்த வர்த்தகப் போர் மிச்சிகனில் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.
இதேவேளை, கனடா அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கிலேயே ரோஜர்ஸ் அவ்வாறு கூறியதாக நான் கருதுகிறேன். கனடா பல ஆண்டுகளாக அமெரிக்காவை ஏமாற்றி வந்துள்ளது, இனி அது தொடர முடியாது” என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர், பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக ட்ரம்ப்பின் செல்வாக்கு குறைந்து வரும் சூழலில், அமெரிக்க செனட்சபையில் பெரும்பான்மையைப் பிடிக்க மிச்சிகன் மாகாணத்தின் தேர்தல் முடிவு மிகவும் தீர்க்கமானதாகப் பார்க்கப்படுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.