Reading Time: < 1 minute

ஐந்து கனேடிய மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

அக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல், ஐந்து கனேடிய மாகாணங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்துள்ளன.

ஒன்ராறியோ, மனித்தோபா, சஸ்காட்செவன், பிரின்ஸ் எட்வர்ட் ஐலண்ட் மற்றும் நோவா ஸ்கொஷியா ஆகிய மாகாணங்களே குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்துள்ள மாகாணங்கள் ஆகும்.

ஒன்ராறியோ மாகாணம், குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு 17.60 டொலர்களிலிருந்து 17.95 டொலர்களாக உயர்த்தியுள்ளது.

பிரின்ஸ் எட்வர்ட் ஐலண்ட், குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு 17.00 டொலர்களிலிருந்து 17.930 டொலர்களாக உயர்த்தியுள்ளது.

நோவா ஸ்கொஷியா மாகாணம், குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு 16.75 டொலர்களிலிருந்து 17.00 டொலர்களாக உயர்த்தியுள்ளது.

மனித்தோபா மாகாணம், குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு 16.00 டொலர்களிலிருந்து 16.40 டொலர்களாக உயர்த்தியுள்ளது.

சஸ்காட்செவன் மாகாணம், குறைந்தபட்ச ஊதியத்தை மணிக்கு 15.35 டொலர்களிலிருந்து 15.70 டொலர்களாக உயர்த்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.