Reading Time: < 1 minute

பிறப்பிப்பு கனடாவின் எட்மண்டன் நகரில் தனது இரு சிறு குழந்தைகளுடன் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் காணாமல்போன 42 வயதான ஸ்கொட் மெக்டெர்மிட் என்பவரைக் கைது செய்வதற்கு எட்மண்டன் பொலிஸார் கனடா தழுவிய பிடிவிராந்து பிறப்பித்துள்ளனர்.

Tamil Business Directory

மெக்டெர்மிட் மற்றும் அவரது குழந்தைகளான 9 வயதான லெஸ்லி மற்றும் 6 வயதான ஜார்ஜ் ஆகியோர் ஆகஸ்ட் 28 ஆம் திகதி காணாமல்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அவர்கள் காணாமல்போன அதே நாளில், லொயிட்மின்ஸ்டர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் கடைசியாகக் காணப்பட்டதாகப் பின்னர் தெரியவந்தது.

குறித்த நபரை பொலிஸார் ஏற்கனவே கண்டறிந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர். குழந்தைப் பராமரிப்பு நீதிமன்ற உத்தரவை மீறி குழந்தைகளைக் கடத்திச் சென்றமை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ், செப்டம்பர் 23 ஆம் திகதி மெக்டெர்மிட்டுக்கு எதிராக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

தற்போது கைவசம் உள்ள தகவல்களின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பாக அவசர ‘ஆம்பர் எச்சரிக்கை’ எதனையும் வெளியிடப்போவதில்லை எனப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மெக்டெர்மிட் மற்றும் அவரது குழந்தைகள் இருக்கும் இடம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், 780-423-4567 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக எட்மண்டன் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.