கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு வெளியே புதிதாக பிறந்த குழந்தையின் உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கனடிய பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வின்னிபெக் நகரத்திலிருந்து வடமேற்கே சுமார் 630 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அம்ஃபர்வில் பகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு வெளியே மனித உடற்பாகங்கள் இருப்பதாக திங்கள்கிழமை காலை 9 மணியளவில் தி பாஸ் பகுதி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இரண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட உடற்பாகங்கள் புதிதாக பிறந்த குழந்தை அல்லது கருவினுடையது என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 204-627-6204 என்ற எண்ணில் தி பாஸ் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.