Reading Time: < 1 minute

கனடாவில் ‘ஹைலைன்’ நிறுவனத்தின் ஆர்கானிக் வெட்டப்பட்ட மினி பெல்லா காளான்களில் ‘லிஸ்டீரியா’ பாக்டீரியா தொற்று பரவியிருக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அவற்றை சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக கனடிய சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Tamil Business Directory

இந்தக் காளான்கள் அல்பெர்ட்டா மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்த காளான்களை உட்கொள்ளவோ, பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ வேண்டாம் எனவும், அவற்றை உடனடியாகக் குப்பையில் வீசுமாறு அல்லது வாங்கிய இடத்திலேயே மீண்டும் ஒப்படைக்குமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

லிஸ்டீரியா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப்போனது போலவோ அல்லது துர்நாற்றம் வீசுவது போலவோ தோற்றமளிக்காது; இருப்பினும் அவை மனிதர்களுக்குக் கடுமையான நோயை உண்டாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாந்தி, குமட்டல், தொடர் காய்ச்சல், தசை வலி, கடுமையான தலைவலி மற்றும் கழுத்து விறைப்பு போன்றவை இதன் முதன்மை அறிகுறிகளாகும். கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்குச் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளே தென்பட்டாலும், இது முன்கூட்டிய பிரசவம், புதிதாகப் பிறந்த குழந்தைக்குத் தொற்று ஏற்படுதல் அல்லது கருவிலேயே குழந்தை உயிரிழப்பது போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீவிரமான பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மனித உயிர்களுக்கே ஆபத்தாக முடியலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.