Reading Time: < 1 minute

கனடாவின் எட்மண்டன் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

செவ்வாய்க்கிழமை காலை 11:35 மணியளவில் 11230 149 St. பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், எட்மண்டன் காவல்துறையினர் விரைந்து சென்றனர்.

அங்கு படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 39 வயது நபர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடற்கூறாய்வு பரிசோதனை புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சமயத்தில், அந்த வணிக வளாகத்திலிருந்து நபர் ஒருவர் ஓடித் தப்பிச் செல்வதைப் பார்த்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தினம் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அப்பகுதியில் பயணித்தவர்கள், சாட்சிகள் அல்லது தங்களது வாகனத்தின் ‘டேஷ்கேம்’ காட்சிகளை வைத்திருப்பவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கொலை வழக்கு விசாரணை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 780-423-4567 என்ற எண்ணிலோ அல்லது ‘கிரைம் ஸ்டாப்பர்ஸ்’ மூலமாகவோ ரகசியமாகத் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.