Reading Time: < 1 minute
கனடாவில் அடல் வில்லியம் கியாஸ் என்ற 98 வயது மூதாட்டி அறிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
ஸ்பெல்லிங் என்னும் ஆங்கில சொல்வதெழுதல் போட்டியில் 1936 ஆம் ஆண்டு தனது 11 வது வயதில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் இந்த மூதாட்டி அண்மையில் தனது 98 ஆம் வயதில் மீண்டும் அதே போட்டியில் பங்கேற்று சாதனையினை நிலை நாட்டி உள்ளார்.
இந்த 98 ஆம் வயதில் குறித்த பெண் மூதாட்டி ஸ்பெல்லிங் பீ சொல்வதெழுதல் போட்டியில் வெற்றியை ஈட்டியுள்ளார்.
87 ஆண்டுகளில் பின்னர மீண்டும் சொல்வதெழுதுதல் போட்டியில் பங்கேற்று அதே பாடசாலையில் அந்த போட்டி நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிதி திரட்டும் நோக்கில் நடைபெற்ற ஸ்பெல்லிங் பீ போட்டியில் 98 வயதான வில்லியம்ஸ் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் வெற்றி ஈட்டி உள்ளார்