Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 91 வயதான மூதாட்டி ஒருவர் உலக சாதனைப் படைத்துள்ளார்.

91 வயதான அலிடா கிங்ஸ்வுட் என்ற மூதாட்டி உலக உள்ளக ரோயிங் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.

லைட்வெயிட் 90-94 பிரிவின் 2000 மீற்றர் போட்டியில் அலிடா இவ்வாறு உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.

போட்டியில் பங்குபற்றிய அலிடாவிற்கு உள்ளுர், வெளியூர் மற்றும் ஏனைய போட்டியார்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவினை வெளிட்டு உற்சாக கரகோசம் எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோயிங் போட்டியின் 2000 மீற்றர் தூரத்தை அலிடா 10 நிமிடங்கள் மற்றும் 33 செக்கன்களில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

உள்ளக ரோயிங் என்பது உள்ளக அரங்கில் காணப்படும் இயந்திரமொன்றின் ஊடாக துடுப்பு போடுதல் போன்றதொரு செயற்பாட்டின் மூலம் குறிப்பிட்ட தூரத்தை கடப்பதாகும்.

நாள்தோறும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று ரோயிங் பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் இந்த பிள்ளைகள் பேரப்பிள்ளைகளினால் இந்தப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியதாகவும் அலிடா கூறுகின்றார்.