Reading Time: < 1 minute

கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 8000 கிலோ மீற்றர் தூரத்தை ஓடிக் கடக்கத் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்திலிருந்து கனடாவின் கியூபெக் மாகாணம் வரையில் ஓடிக் கடக்க உள்ளார்.

49 வயதான ஜோன் ரோச் என்பவரே இவ்வாறு மரதன் ஓட்டத்தை தொடர உள்ளார்.

நாள் ஒன்றுக்கு 52 கிலோ மீற்றர் தூரத்த ஓடிக் கடக்க உத்தேசித்துள்ளதாகவும் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக ஓட உள்ளதாகவும் ஜோன் தெரிவிக்கின்றார்.

ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோ மீற்றர்கள் தூரத்தை ஓடி ஜோன் பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் புளொரிடாவிற்கு சென்ற அங்கிருந்து கனடா நோக்கி மரதன் ஓட்டப் பயணத்தை ஆரம்பிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரதன் ஓட்டப் பயணம் சற்று அபாயகரமானது எனவும் கரடிகள், முதலைகள் உள்ள பாதையில் இந்த ஓட்டப் பயணம் அமைந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.