கனடாவின் கியூபெக் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 8,000 சுகாதார ஊழியர்களை இடைநீக்கம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் காலக்கெடு விதித்திருந்தும், சுகாதார ஊழியர்கள் மொத்தம் 8,000 பேர்கள் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
இதனால் வாரத்திற்கு மூன்று முறை இவர்கள் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த 8,000 ஊழியர்களையும் இடைநீக்கம் செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக உரிய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மொத்தம் எத்தனை ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை சுகாதாரத் துறை இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் பல எண்ணிக்கையிலானோர் பட்டியலில் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கியூபெக் சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலில், செப்டம்பர் மாத இறுதியில் இருந்தே இதுவரை 864 பேர்களை புதிதாக பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும், 2,713 பகுதி நேர ஊழியர்களை முழு நேரமாக பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.