Reading Time: < 1 minute

கனடாவில், 80 வயதுக்கு மேலானவர்கள் கோவிட் 19 தொற்றுக்கு இலக்காகும் அளவு குறைவடைந்துள்ளதாக, தலைமை சுகாதார வைத்திய அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி வழங்கல்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த சாதகமான சூழல் எதிர்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். முதியோர் மத்தியிலும், நீண்டகால பராமரிப்பு நிலையங்களிலும் வைரஸ் பரவல் குறைவடைந்துள்ளமை, தடுப்பூசிகள் இன்னும் பல அனுகூலங்களை தரும் என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கனடாவின் பல மாகாணங்கள், தமது தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகளை விரிவு படுத்தியுள்ள நிலையில், தலைமை சுகாதார வைத்திய அதிகாரியின் இக்கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேவேளை, ஒண்டாரியோவில், 75 வயதுக்கு மேற்பட்டோரும், நேற்று முதல், தடுப்பூசிகளை பெறுவதற்கான பதிவுகள் ஆரம்பித்துள்ளது.

வரும் மாத ஆரம்பத்திலேயே, 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவிருந்த நிலையில், எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னனதாகவே அவ்விலக்கு எட்டப்பட்டுள்ளது.