Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பயணத் தடையை மீறி 7,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினவர்கள் நாட்டிற்குள் நுழைய முற்பட்டதாக, கனேடிய எல்லை முகவரகம் தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள் எனவும் அனைவரும் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை காரணமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பார்வையிடல், பொருள் வாங்கல் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக கனடாவுக்குள் நுழைய முயற்சித்ததாக கூறப்படுகின்றது.

கடந்த மார்ச் 22ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை சமயோசிதப் பயணத் தடையின் கீழ் 7,639 வெளிநாட்டினருக்கு கனடாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திடமிருந்து கிடைத்த சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுழைவு மறுக்கப்பட்டவர்களில் 87 சதவீதம் அமெரிக்கர்கள், 6,615 அமெரிக்க குடிமக்கள் கனேடிய எல்லை முகவர்களால் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதமுள்ள 1,024 பேர் சிபிஎஸ்ஏவால் குறிப்பிடப்படாத பிற நாடுகளின் குடிமக்கள் ஆவர்.