Reading Time: < 1 minute

விண்ணப்பித்த 700 மாணவர்களின் அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளாகியிருக்கிறார்கள்.

நடந்தது என்ன?

இந்த மாணவர்கள், 2019 -19 காலகட்டத்தில் கனடாவுக்கு வந்துள்ளார்கள்.

அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போதுதான் தாங்கள் அனைவரும் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்பட இருப்பதாக கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி கடிதங்கள் அனுப்பியுள்ளது.

பொலிசார் தெரிவித்துள்ள தகவல் தற்போது, Education Migration Servicesஎன்ற அமைப்பை நடத்துபவர்களில் ஒருவரான Rahul Bhargava என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவரது கூட்டாளிகளான Brijesh Mishra மற்றும் Gurnam Singh என்பவர்களை பொலிசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் நடவடிக்கை இந்நிலையில், கனடாவிலிருக்கும் பாதிக்கப்பட்ட மாணவமாணவியர், ரொரன்றோவிலிருக்கும் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆணையம் முன்பு கூடி தாங்கள் நாடுகடத்தப்படுவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

நாங்கள் குற்றவாளிகள் அல்ல, பாதிக்கப்பட்டவர்கள், கனேடிய அரசே விழித்தெழு, பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்காதே என்று கூறும் பதாகைகளுடன் அவர்கள் அங்கு கூடியிருந்தார்கள்.