Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் வீடொன்றின் உரிமையாளரான பெண் ஒருவர் கடந்த ஏழு ஆண்டுகளாக கூடுதல் இயற்கை எரிவாயு கட்டணத்தை செலுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இயற்கை எரிவாயு கட்டணம் கூடுதலாக அறவீடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவிக்கின்றார்.

தனது அயலவர்களுக்கான கட்டணத்துடன் ஒப்பீடு செய்யும் போது தமது கட்டணம் கூடுதலாக அறவீடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக இவ்வாறு குறித்த நிறுவனம் தன்னிடமிருந்து கூடுதல் தொகை அறவீடு செய்துள்ளது என பெண் தெரிவித்துள்ளார்.

இது நியாயமற்ற செயல் எனவும் கூடுதலாக அறவீடு செய்யப்பட்ட கட்டணம் மீள செலுத்தப்பட வேண்டும் என பொட்ரி சோய் என்ற பெண் தெரிவித்துள்ளார்.

ஒன்றாரியோ மாகாணத்தின் மிஸ்ஸஸாகா பகுதியில் வசித்து வரும் இந்த பெண் ஒருவரே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

அயலவர்களின் வீடுகளில் கட்டணம் 20 டாலர்களாக காணப்பட்டபோது தமக்கான கட்டணம் சுமார் 77 டாலர்களாக அறவீடு செய்யப்பட்டு வந்தது என தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தபோது வீட்டு பாவனைக்கான எரிவாயு கட்டண பிரிவில் தமது வீட்டை இணைத்திருக்கவில்லை என்பதை கண்டறிந்துள்ளார்.

வர்த்தக பாவனை கட்டண அறவீட்டு முறையின் கீழ் குறித்த பெண்ணிடம் கட்டணம் அறவீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஏழு ஆண்டுகளாகவே குறித்த பெண் பெருந்தொகை பணத்தை கூடுதலாக செலுத்தியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.