டேவ் ப்ரொக்டர் என்ற நபரே இவ்வாறு 68 நாட்களில் கனடாவை சுற்றி வலம் வந்துள்ளார்.
கடந்த 1991ம் ஆண்டில் அல் ஹோவி என்ற நபர் 72 நாட்கள் 10 மணித்தியாலங்களில் கனடாவை சுற்றி ஓடி சாதனை நிலைநாட்டியிருந்தார்.
இந்த சாதனைனயை அறுபத்து ஏழரை நாட்களில் ஓடிக் கடந்து டேவ் ப்ரொக்டர் சாதனை படைத்துள்ளார்.
தாம் உலகத்தின் உச்சத்தில் இருப்பதாக உணர்வதாகவும், உலகின் மிக அழகான நாட்டுக்கு நன்றி பாராட்ட சந்தர்ப்பம் கிடைத்த்தாக உணர்வதாகவும் ப்ரொக்டர் சாதனை நிறைவில் கூறியுள்ளார்.
நாள் ஒன்றுக்கு சுமார் 105 முதல் 107 கிலோ மீற்றர் வரையில் ப்ரொக்டர் ஓடிக் கடந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சாதனையை நிலைநாட்டுவதற்காக 12 பாதணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாள் ஒன்றுக்கு 9000 கலோரிகளை அவர் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கலோரி இழப்பினை ஈடு செய்வதற்காக பல்வேறு இடங்களில் அவர் உணவை உட்கொண்டுள்ளார்.
இந்த உலக சாதனைக்கு மேலதிகமாக 12 மணித்தியாலங்கள தொடர்ச்சியாக திரெட் மில்லில் ஓடிய உலக சாதனை உள்ளிட்ட நீண்ட தூர ஓட்டம் தொடர்பிலான பல்வேறு கனேடிய சாதனைகளையும் ப்ரொக்டர் வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.