Reading Time: < 1 minute
கைது 500க்கும் மேற்பட்ட தபால் பொதிகளை களவாடிய கனேடிய அஞ்சல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்பர்ட்டா மாகாணத்தின் வெயின்ரைட் பகுதியைச் சேர்ந்த அஞ்சல் ஊழியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடுகள் மற்றும் வாகனங்களிலிருந்து இவ்வாறு தபால் பொதிகளை குறித்த நபர் களவாடியுள்ளார்.
இந்த களவாடப்பட்ட பொதிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்பதுடன் அவை உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட உள்ளது.
எவ்வளவு பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த சந்தேக நபருக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுக்களையும் பொலிஸார் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணைகளின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட உள்ளது.