கனடாவின் ஹாமில்டன் பகுதியில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கிய நிலையில், 10 சிறார்கள் உட்பட 13 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஹாமில்டன் தீயணைப்புத் துறை தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 6.30 மணியளவில் இரண்டு மாடி குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், கரும்புகை சூழ ஆபத்தான நிலையில் காணப்பட்ட குடியிருப்புக்குள் அவசர அவசரமாக நுழைந்துள்ளனர்.
தொடர்ந்து குழந்தை ஒன்றை மீட்டு அவசரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஹாமில்டன் அவசர உதவி மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவிக்கையில், 17 வயதுக்கு உட்பட்ட மொத்தம் 10 சிறார்களும் மூன்று பெரியவர்களும் என 13 பேர் முதலுதவிக்கு பின்னர் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதில் 5 வயது குழந்தை ஒன்று ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சையில் உள்ளது. எஞ்சியவர்கள் சகஜ நிலைக்கு திரும்பியதாக தெரிவித்துள்ளனர்.