Reading Time: < 1 minute

சுமார் 45 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதை பொருளை பயண பொதிக்குள் மறைத்து கடத்த முயற்சித்த 21 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடிய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி இந்த கஞ்சா போதை பொருளை ஜெர்மனிக்கு கடத்த முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

கனடிய எல்லை பாதுகாப்பு படையினர் குறித்த பயண பொதியை சோதனையிட்டுள்ளனர்.

கடத்தப்படவிருந்த கஞ்சா போதை பொருளின் சந்தை பெறுமதி 180000 டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.