கனடாவில் இடம்பெற்ற 43 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மீண்டும் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டாவாவில் கூடும் போது முன்னெப்போதையும் விட அதிகமான பெண்கள் பொது மன்றத்தின் (the House of Commons) இடங்களை நிரப்ப உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒட்டாவாவில் அதிகமான பெண்களின் பங்களிப்பு இருக்காது என்று கனடாவின் 2019 கூட்டாட்சித் தேர்தலுக்குப் பின்னர் சமத்துவ சட்டத்தரணிகள் சுட்டிகாட்டியுள்ளனர்.
இது பற்றி சமத்துவ குரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் எல்லிநோர் பாஸ்ட் கூறுகையில், “நாங்கள் நிர்ணயித்த 30 சதவீத இலக்கை விட இன்னும் குறைந்துவிட்டோம், கனடாவில் மாற்றங்கள் மந்தமாகவும் அதேவேளை, அதிகரித்ததாகவும் ஏற்பட்டுள்ளன – இது இந்தத் தேர்தல் காலத்தில் தொடர்ந்து நீடித்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் 98 பெண்களக் கொண்டிருக்கும் அதேவேளை, இந்த தொகை மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 29 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று சமத்துவ சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் 88 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், அது முழு சபையிலும் 26 சதவீதமாக இருந்தது.