கனடிய வரலாற்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஒன்றாக கருதப்படும் விமான நிலைய தங்கம் கடத்தல் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
20 மில்லியன் டொலர் பெறுமதியான 60000 தங்க பிஸ்கட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் என்பன இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருந்தது.
ரொறன்ரேவரின் பியர்சன் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
அந்த வகையில் குறித்த தங்கக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு இடையில் இரகசிய குறியீட்டு தொடர்பாடல் முறைமை பயன்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரான பிரசாத் பரமலிங்கம் மற்றும் கிங் மெக்லேன் ஆகியோர் இரகசிய குறியீட்டு தொடர்பாடல் முறைமை பயன்படுத்தியுள்ளனர்.
தங்கக் கொள்ளை, ஆயுத பரிமாற்றம் மற்றும் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இரகசிய குறியீட்டு தொடர்பாடல் முறையை பயன்படுத்தி பிரசாத் பரமலிங்கம் தகவல்களை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.