Reading Time: < 1 minute
சர்ரே பாடசாலைகளில் அனைத்து ஊழியர்களும், மழலையர் பாடசாலை மற்றும் 4 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், முகக்கவசங்கள் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்துவமாறு பல மாதங்களாக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்ரே கண்காணிப்பாளர் ஜோர்டான் டின்னியின் ஒரு அறிவிப்பும் இளைய மாணவர்களுக்கு முககவசங்கள் பரிந்துரைக்கப்படுவதாகக் கூறுகிறது. ஆனால் 4ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை.