Reading Time: < 1 minute

கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் 32 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட பெண் ஒருவரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியா, பிரின்ஸ் ஜோர்ஜ் மவுன்டீஸில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிலிருந்து இந்த உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பூங்காவிலிருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள் டோனா சார்ளி என்ற பெண்ணினது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

1990ம் ஆண்டில் டோனா படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய டோனாவின் காதலருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்திருந்தது.

உடல் பாகங்கள் மீட்கப்பட்ட விவகாரம் டோனாவின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

டோனாவை ஹோட்டல் அறையில் படுகொலை செய்து அவரது உடல் மறைக்கப்பட்டிருந்தது.

1991ம் ஆண்டில் டோனாவின் சடலம் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் அவரது தலை இருக்கவில்லை. மிக நீண்ட இடைவெளியின் பின்னர் தலைப் பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.