Reading Time: < 1 minute

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக கனடாவிற்கு வருவதற்கு உதவியவர்களை தேடி அவர்களுக்கு நன்றி பாராட்டும் முயற்சியில் கனேடிய பிரஜையொருவர் இறங்கியுள்ளார்.

தற்பொழுது அல்பர்ட்டாவில் வாழ்ந்து வரும் இவோ சிகோ என்ற நபரே இவ்வாறு தனக்கு உதவியவர்களை தேடி வருகின்றார்.

கடந்த 1994ம் ஆண்டு மத்திய பொஸ்னியாவில் இராணுவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய போது சிகோவிற்கு சந்திக்க கிடைத்த இளம் கனேடிய குழுவொன்றே தாம் கனடா வருவதற்கு உதவியதாக தெரிவித்துள்ளார்.

இந்த கனேடிய இளம் கும்பலில் இருந்த பெண் ஒருவர் என்ன வேண்டுமென கேட்ட போது, நகைச் சுவையாக தம்மை கனடாவிற்கு அழைத்துச் செல்லுமாறு கோரியதாக சிகோ தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பிய குறித்த இளம் பெண், குடியேறுவதற்கு தேவையான ஆவணங்களை தபால் மூலம் சிகோவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த ஆவணங்களைக் கொண்டு கனடாவில் குடியேறியுள்ளதாக சிகோ தெரிவிக்கின்றார்.

நெருக்கடியான தருணத்தில் தமக்கு உதவியவர்களை தேடி நன்றி பாராட்ட ஆசைப்படுவதாக இகோ தெரிவிக்கின்றார்.

தமது நாட்டில் யுத்தம் இடம்பெற்று வந்த தருணத்தில் கனடாவிற்கு வருவதற்கு உதவி நல்லதொரு வாழ்க்கையை வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுத்தவர்களை சந்தித்து அவர்களுக்கு நன்றி பாராட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இகோ கூறுகின்றார்.