கனடாவில் 3 வயது குழந்தை ஒன்று காப்பகத்தில் இறந்த விவகாரத்தில் விசாரணையை எதிர்கொண்ட பெண் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் ரெஜினா பகுதியில் பகல் நேர காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பப்பட்டிருந்த 3 வயது குழந்தை Zoey Hancock கடந்த 2018 மார்ச் மாதம் 20ம் திகதி மரணமடைந்தது.
இந்த விவகாரத்தில் 2020 பிப்ரவரி மாதம் குறித்த காப்பகத்தில் பணியாற்றி வந்த Ashley Longworth என்பவர் மீது வழக்கு பதியப்பட்டது.
சம்பவத்தன்று பகல் சுமார் 9.45 மணியளவில் திடீரென்று குறித்த காப்பகத்தில் இருந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை Zoey Hancock மயக்கத்தில் இருந்ததும், அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டதாகவும், சம்பவயிடத்திற்கு சென்ற பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்தபோது உரிய அனுமதி பெற்றிராத காப்பகத்தில் Ashley Longworth பணியாற்றி வந்துள்ளதுடன், அவர் 5 குழந்தைகளை பராமரித்தும் வந்துள்ளார்.
இதனிடையே குழந்தை Zoey சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைந்துள்ளது. இதனையடுத்து Ashley Longworth மீது பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் திங்களன்று முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற விசாரணையில் போதிய ஆதாரங்கள் இல்லை என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து Ashley Longworth கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.