Reading Time: < 1 minute
சமீபத்திய மாகாண நிதி குறைப்பினால், 250 வேலை குறைப்பினை எதிர்கொள்ளும் அபாயத்தினை கல்கரி பல்கலைக்கழகம் எதிர்கொண்டுள்ளது.
காலியிடங்களை குறைத்தல் மூலம் 100 வேலை குறைப்பினையும், ஓய்வு மற்றும் ராஜினாமாக்கள் மூலம் 150 வேலை குறைப்பினையும் மேற்கொள்ளவுள்ளது.
இரண்டு சுற்றுக்களான இந்த பணி நீக்கங்கள் இருக்குமென யு சி சி புரோவோஸ்ட் மற்றும் துணைத் தலைவர் ட்ரு மார்ஷல் தெரிவித்துள்ளார்.
முதலாவது வேலை குறைப்பு இந்த மாத இறுதியிலும், இரண்டாவது வேலை குறைப்பு ஜனவரி நடுப்பகுதியிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
யுனைடெட் கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் மேம்பட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக 5.1 பில்லியன் டொலர்களை வழங்கியது, இது முந்தைய ஆண்டை விட ஐந்து சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.