Reading Time: < 1 minuteகனடா மற்றும் அமெரிக்க எல்லை பகுதியில் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் போலீஸ் அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையில் எல்லை பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று வார கால பகுதியில் போலீசாரின் பிரசன்னம் சுமார் 35% அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா வரி விதிப்பதாக அறிவித்த நிலையில் இவ்வாறு எல்லை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் குடியேறிகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதாகவும் பாரிய அளவிலானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகன விபத்து சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபருக்கு, நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிராம்டன் பகுதியில் இந்த வாகன விபத்து இடம்பெற்றிருந்தது. இந்த வாகன விபத்தில் ஒரு இளம் பெண் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் படுகாயம் அடைந்திருந்தனர். இந்த சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்று இருந்தது. கிங் மற்றும் எய்த் கன்சசன் வீதிகளுக்கு அருகாமையில் இந்தRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து நாசமாகிவிட்ட நிலையில், வீடுகளை மீண்டும் கட்டி எழுப்ப அங்குள்ள கட்டுமானப் பணியாளர்களுக்கு மரம் தேவைப்படுகிறது. ஆனால், ட்ரம்ப் வரிவிதிப்பால் அவர்கள் இக்கட்டான ஒரு நிலைமையில் உள்ளார்கள். அதாவது, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், தனது மரக்கட்டைகளில் 70 சதவிகிதத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துவந்தது. ஆனால், ட்ரம்பின் வரிவிதிப்பு அச்சத்தால், வேறு நாடுகளுக்கு மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்ய அம்மாகாணம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறித்த நபர் பெண்களை காதலிப்பதாக பாசாங்கு செய்து அவர்களிடமிருந்து பெரும் தொகை பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த மோசடிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களை பயன்படுத்திRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் 15 வயது உடைய சிறுவன் ஒருவனுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கனடாவின் வோகன் பகுதியில் பெண் ஒருவரை படுகொலை செய்ததாக குறித்த சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காமினோ மற்றும் ரதர்புர்ட் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து கொண்ட கொண்ட போலீசார் குறித்த இடத்திற்கு சென்றபோது பெண் ஒருவர் படுகாயம் அடைந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு தீ விபத்தில் உயிரிழந்து உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். பில்லர் ரொக் மற்றும் ஹெஸெல்டென் வீதிகளுக்கு அருகாமையில் இந்த வீடு தீ விபத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீப்பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா கனடிய எல்லை பகுதியில் இடம்பெற்ற எல்லை கடப்பு சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க மற்றும் கனடிய எல்லை பாதுகாப்பு படையினர் குறித்த கைதுகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் மூன்று இடங்களில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவிற்கும் கனடாவின் தென் அல்பர்ட் எல்லை பகுதிக்கும் இடையிலான பகுதியில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. நபர் ஒருவர் போலீசாரின் எச்சரிக்கையை மீறிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் கழிவுக் குழியொன்றில் வீழ்ந்த மானை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். வனவிலங்கு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குறித்த மானை மீட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 30 அடி ஆழமான கழிவுக் குழிக்குள் குறித்த மான் சிக்கிக் கொண்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகள் மானை மீட்க மேற்கொண்ட முயற்சியின் போது அந்த மான் பதற்றமடைந்து தப்பிக்க முயற்சித்ததாகவும் இதனால் மீட்கும் பணிகள் சவால் மிக்கதாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மீட்பு பணிRead More →