Reading Time: < 1 minuteஅலாஸ்காவில் பயிற்சி செய்துகொண்டிருந்த கனடிய ராணுவ ஹெலிகாப்டர் மீது உயர் சக்தியுள்ள லேசர் ஒளி தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். இதற்காக அலாஸ்காவின் டெல்டா ஜங்ஷன் பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய ஹைடீ குடெர்மோட் (Heide Goodermote) என்பவருக்கு மூன்று ஆண்டு அவதானிப்பு (probation) தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “என் வீட்டிற்கு மேல் தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் பறப்பது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் எங்கே வேண்டுமானாலும் பறக்க முடியாது. எனவே,Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தேற்கடிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்திருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஜான் ரஸ்டாட் முன்வைத்த இந்த தீர்மானம், கட்சி வரிசைப்படி நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அனைத்து கன்சர்வேடிவ் உறுப்பினர்களும் ஆதரித்து வாக்களித்த நிலையில், பசுமை கட்சி உறுப்பினர்கள் இருவரும் என்.டி.பி கட்சியுடன் இணைந்து எதிர்த்தனர். எங்கள் மாகாணம் இதுவரை இல்லாத அளவுக்கு தளர்ந்த நிலையில் உள்ளதுRead More →

Reading Time: < 1 minuteமார்க்கம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒண்டாரியோ மாகாண போலீசாரின் தகவலின்படி, ஹைவே 407-ல் இன்று காலை இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வாகன விபத்தில் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு நோக்கி செல்லும் வழியில் மார்கம் நகரில் உள்ள கென்னெடி வீதிக்கு அருகாமையில் காலை 10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்துக்குள்ளான வாகனத்தில் ஓட்டுநர் மட்டுமே இருந்தார், அவர்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 வீத வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், சீனாவிலிருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கு 10% விதிக்கப்படும் வரியை இரட்டிப்பு செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார். ட்ருத் சோஷியல் (Truth Social) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், அமெரிக்காவுக்குள் பென்டானில் (Fentanyl) போன்ற மயக்க மருந்துகள் அதிக அளவில் கடத்தப்படுவதாகவும், இதை தடுக்கவே இந்த வரிகளை அமல்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteபிரித்தானிய பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவரும் ட்ரம்பும் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்கள். அப்போது, கனடா தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் பிரித்தானிய பிரதமரிடம் கேள்வி எழுப்ப, அவரை தடுத்து நிறுத்தினார் ட்ரம்ப். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் ஊடகவியலாளர்களை சந்தித்தார்கள். அப்போது ஊடகவியலாளர் ஒருவர், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த ட்ரம்பின் அறிக்கைகள் குறித்து நீங்கள் அவருடன் விவாதித்தீர்களா என ஸ்டார்மரிடம்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற சூழல் தற்போது கனடாவில் உருவாகியுள்ளது. கனடாவின் லிபரல் கட்சி, நான்கு ஆண்டுகளில் முதன்முறையாக கன்சர்வேடிவ் கட்சியை பின் தள்ளி, பிரமிக்க வைக்கும் வகையில் மீண்டும் வந்துள்ளது. ட்ரம்பின் நிலைப்பாடுசமீபத்திய Ipsos ஆய்வுகளின் அடிப்படையில், லிபரல் கட்சி தற்போது கன்சர்வேடிவ் கட்சியை விட 2 சதவிகிதம் முன்னிலை பெற்றுள்ளனர். ஆறுRead More →

Reading Time: < 1 minuteஒன்டாரியோ லிபரல் கட்சி தலைவர் பானி க்ராம்பி, மிஸ்ஸிசாகா ஈஸ்ட்-கூக்ஸ்வில் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக கட்சித் தலைவராக இருந்த அவர், முன்னதாக 10 ஆண்டுகள் மிஸ்ஸிசாகா நகரத்தின் மேயராக பணியாற்றியிருந்தார். இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர், பிராம்ப்டன் மேயர் பாட்ட்ரிக் பிரவுனின் மனைவியின் தாயாரான சில்வியா குவால்தியேரி என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், பானி க்ராம்பி தனது பதவியை தொடருவதாக அறிவித்துள்ளார். அவர் இந்த அறிவிப்பை மிஸ்ஸிசாகாRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் வரி அச்சுறுத்தலால் ஒன்டாரியோ பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் நடத்தப்பட்ட திடீர் தேர்தலில், டக் ஃபோர்ட் மற்றும் அவரது புரோகிரஸிவ் கன்சர்வேடிவ் (PC) கட்சி மூன்றாவது முறையாக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. நேற்றிரவு நிலவரப்படி, ஃபோர்டின் பிசி கட்சி 81 இடங்களில் முன்னிலை பெற்றது, இது முன்பிருந்த 79 இடங்களின் எண்ணிக்கையை விட அதிகம். என்.டி.பி. (NDP) 26 இடங்களைப் பெற்றதால், அவர்கள் மீண்டும் ஒன்டாரியோவில் அதிகாரப்பூர்வRead More →

Reading Time: < 1 minuteடொராண்டோ பெரும்பாகம் மற்றும் ஹாமில்டன் பகுதியில் இரண்டு வார காலத்தில் 16 வியாபார நிறுவனங்களில் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தி ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். பெப்ரவரி 8 முதல் பெப்ரவரி 25 வரை டொராண்டோ, ஹாமில்டன், குஎல்ஃப், பீல், ஹால்டன் மற்றும் நயாகரா பொலிஸாருக்கு 16 கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 14 கொள்ளைகள் நிதி நிறுவனங்களில், மற்ற இரண்டு சில்லறை கடைகளில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிRead More →

Reading Time: < 1 minuteஉலகின் முதனிலை மின்சார உபகரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஜீ நிறுவனத்தின் மின் அடுப்புகள் தொடர்பில் கனடாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுகாதார நிறுவனம் மற்றும் எல்.ஜீ நிறுவனம் என்பன குறித்த சில வகை மாடல் அடுப்புகளை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளன. அழி முன்புறத்தில் உள்ள பொத்தான்களை தவறுதலாக செயல்படுத்துவதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, பயனர்கள் அல்லது செல்லப்பிராணிகள் தவறுதலாக தொடுவதால் நிகழக்கூடும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்தின் தலைநகரான ஹாலிஃபாக்ஸ் (Halifax, Nova Scotia) நகரில், ஆறு வயது சிறுவன் ஒருவனை கத்தியால் குத்தியதாக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று, சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் ஹாலிஃபாக்ஸிலுள்ள Scotia Square Mall என்னுமிடத்தில், ஆறு வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் விரைய, அந்தச் சிறுவன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்குக்Read More →

Reading Time: < 1 minute2024 ஆம் ஆண்டு கனடா மிக அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளதாகவும், அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் அனேகமானவர்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் எனவும் தெகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கனடா கடந்த வருடம் அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது,ஒருதசாப்தகாலத்திற்கும் மேற்பட்ட காலத்தில் அதிகளவானவர்கள் வெளியேற்றப்பட்டமை கடந்த வருடம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவில் வீடுகளிற்கான தட்டுப்பாடு கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் வரை கனடா நாடுகடத்தியவர்களின் எண்ணிக்கையை வைத்துபார்க்கும்போது 2015ம் ஆண்டின் பின்னர்Read More →

Reading Time: < 1 minuteக்யூபெக்கில் உள்ள இரு கோழிப்பண்ணைகளில் கடந்த நவம்பரில் பறவை காய்ச்சல் (Avian Influenza) கண்டறியப்பட்டது என கனேடிய உணவு ஆய்வு அமைப்பு (CFIA) தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது, க்யூபெக்கில் 58 இடங்களில் இந்த வைரஸ் பதிவாகியுள்ளதுடன், மொத்தம் 14,65,500 பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 220 இடங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதுடன், 18 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கனடாவில் மனிதனுக்கு முதல் முறையாக பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்தRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் சமன்வயமான அதிர்வுகள் பதிவாகியிருந்தது. எனினும், அண்மைய நிலநடுக்கம் யாராலும் உணரப்படவில்லை என கனடிய நில அதிர்வு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விபத்தினால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நான்கு நாட்களுக்கு முன் நிகழ்ந்த அதிர்வுகள் 4.7 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் செச்செல்ட் (Sechelt) நகருக்கு அருகே வான்கூவர் தீவின் தென்மேற்குப்Read More →

Reading Time: < 1 minuteவடக்கு அல்பெர்டாவில் கடந்த வாரம் ஏழு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் மீது பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 19ம் திகதி இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அவசர சேவை பிரிவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஒரு குழந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேபோல், இன்னொரு குழந்தைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வாகன் நகரில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கடந்த வாரம் நடந்த ஆயுத முனையில் கொள்ளை முயற்சியை மேற்கொண்ட நான்கு பேரை யோர்க் போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 24ஆம் திகதி இரவு 9 மணியளவில் சென்வே பாலிவர்டு மற்றும் ஹைவே 427 பகுதியில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கொள்ளை முயற்சி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை மூடப்பட்டதன் பின்னர் வெளியே வந்த ஒருவரிடம் நான்கு பேரும்Read More →

Reading Time: < 1 minuteFive Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கனடா, Five Eyes alliance என்னும் அமைப்பில் அங்கத்துவம் பெற்ற நாடாக இருந்து வருகின்றது. உளவுத்தகவல்கள் ஒத்துழைப்புக்காக 1941ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், கனடாவுடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாளர்களாக உள்ளன. இந்நிலையில், வெள்ளை மாளிகை மூத்த அலுவலரும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவருமானRead More →

Reading Time: < 1 minuteரஷ்யா உக்ரைனை ஊடுருவி 3ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் கனடாவின் ரொரன்றோவில் நூற்றுக்கணக்கான கனேடியர்கள் திரண்டார்கள். நேற்று, அதாவது, பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமையன்று, நூற்றுக்கணக்கான கனேடியர்கள், கனடாவின் ரொரன்றோவிலுள்ள நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் கூடி உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக்கொண்டனர். பேரணியில் கலந்துகொண்ட மக்கள், உக்ரைன், ரஷ்யாவுடனான போரின் நான்காவது ஆண்டில் நுழைந்துள்ளது. இனியும் அமெரிக்காவை நம்பியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அனைத்து தரப்பினரையும்Read More →