Reading Time: < 1 minuteகனடா மீது ட்ரம்ப் வரி விதித்தால், அதைத் திரும்பப் பெறும் வகையில் அமெரிக்காவுக்கு வலியை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் கனடா பிரதமர். தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகளுக்கு வரி விதிப்பது தொடர்பிலான ஆவணங்களில் கையெழுத்திட இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ட்ரம்ப். கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் 83 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த போதை பொருட்களுடன் இரண்டு மெக்ஸிகோ பிரஜைகளும் நான்கு கனடியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் மூவரை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிஸ்ஸிசாகாவில் இந்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யோர்க்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒஷாவில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். சென்டர் மற்றும் கிப் வீதிகளுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் வீட்டிற்குள் சலனமற்றிருந்த நபர் ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொறன்ரோ பெரும்பாகம் மற்றும் யோர்க் பிராந்தியங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆபரணங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பெறுமதியான பொருட்கள் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ பொலிஸார் பனிப்படர்ந்த பகுதிகளில் நடமாடுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். பனிபடர்ந்த பகுதியொன்றில் வாகனம் வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். ஆஸ்பிரிட்ஜ் விரிகுடா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. பனிக்கட்டிகள் உறுதியானவை போன்று தென்பட்டாலும் அவற்றில் ஆபத்து அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்படலம் எவ்வளவு செறிவானது என்பதை அறிந்து கொள்ளாது அதன் மேல் நடமாடுவது வாகனம் செலுத்துவது மிகவும் ஆபத்தானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பனி விளையாட்டுக்களில்Read More →

Reading Time: < 1 minuteதான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா முதலான சில நாடுகளுக்கு வரி விதிப்பது தொடர்பிலான ஆவணங்களில் கையெழுத்திட இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ட்ரம்ப். சமூக ஊடகம் ஒன்றில் ட்ரம்ப் வெளியிட்ட செய்தி ஒன்றில், ஜனவரி மாதம் 20ஆம் திகதி, தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், தான் கையெழுத்திட இருக்கும் முதல் ஆவணங்களில் ஒன்று கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு வரி விதிப்பது தொடர்பிலானதாகத்தான் இருக்கும் என்று கூறியிருந்தார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றின் விளைவாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வார்டன் மற்றும் டான்ஸ் ஃபோர்த் வீதிகளுக்கு அருகாமையில் இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவருக்கு உயிர் ஆபத்து கிடையாது எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிசிசாகாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தனி ஒரு வாகனம் இன்றைய தினம் காலை விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. பிக்சி மற்றும் டெறி வீதிகளுக்கு அருகாமையில் இன்று அதிகாலை வேளையில் இந்த வாகன விபத்து இடம் பெற்றுள்ளது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட உயிர் காப்பு பணியாளர்கள் விபத்துக்குள்ளானவருக்கு முதலுதவி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →