Reading Time: < 1 minuteகனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் பாலியல் துஷ்பயோக சம்பவங்களை மேற்கொண்ட சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சந்தேக நபர், சிலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் பெண்கள் ஆடை மாற்றும் பகுதிக்கு அத்துமீறி பிரவேசித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. பாலியல் துஷ்பியோக சம்பவங்களை மேற்கொண்டு குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteகட்சித் தலைமை பதவிக்காக போட்டியிட முடியாது என கட்சி தமக்கு அறிவித்ததாக லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தரா ஆர்யா தெரிவித்துள்ளார். லிபரல் கட்சியின் தலைவர் பதவி வகித்து வந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனை தொடர்ந்து அந்த பதவி வெற்றிடத்திற்கு கட்சியின் பல உறுப்பினர்கள் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர். ஒட்டாவா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா தலைமைத்துவ பதவிக்காக போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். எனினும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் எயார் பிரான்ஸ் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எயார் பிரான்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இவ்வாறு கனடாவின் விண்ணிப்பிக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விண்ணிப்பிக்கில் அமைந்துள்ள ரிச்சர்ட்சன் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் பிரான்ஸ் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வானத்தில் திடீரென ஏற்பட்ட புகை மணம் காரணமாக விமானம் அவசரமாக திசை திருப்பப் பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், அவசர தரையிறக்கம் மேற்கொள்ளப்படவில்லைRead More →

Reading Time: < 1 minuteகனடா தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்து குறித்து பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ஸ் இதுவரையில் எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை. கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக உள்வாங்க போவதாக டிரம்ப் அண்மையில் பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீண்டும் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு பின்னணியில் கனடாவின் அரச தலைவராக கருதப்படும் மூன்றாம் சால்ஸ் மன்னர் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பொன்றை அந்நாட்டின் முன்னணி வீட்டுமனை இணையதளமான ரெண்டல்ஸ்.சிஏ (Rentals.ca) வெளியிட்டுள்ளது. கனடாவில் கொரோனாத் தொற்று தீவிரமடைந்திருந்த காலத்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் அறிவிடப்படும் பணம் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு வரையில் 4.6 வீதமாக அதிகரிக்கப்பட்டிருந்த வாடகைத் தொகை 2022 ஆம் ஆண்டில் 12.1 வீதமாக அதிகரித்திருந்ததோடு, 2023 ஆம் ஆண்டில் 8.6 வீதத்தினால் அதிகரித்திருந்தது. இதனால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரபல ராப் இசை கலைஞர்களில் ஒருவரான ஹசன் அலி கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவை மையமாக கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஹஸன் அலி “டாப் 5” என்ற பெயரில் மேடைகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார். ஆயுதங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றின் அடிப்படையில் ஹசன் அலியை பொலிஸார் கைது செய்துள்ளனர். அண்மையில் மார்க்கம் பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் குறித்தRead More →

Reading Time: < 1 minuteகத்தி குத்து சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்காப்ரோ (Scarborough) மால் வரும் பகுதியில் நேற்றைய தினம் இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் ஆறு பேருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவருக்கு உயர் ஆபத்து கிடையாது என போலீசார் தெரிவிக்கின்றனர். குறித்த காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கத்திக்குத்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிஸிஸாகா பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பீல் பிராந்திய போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளார்னர். துப்பாக்கிச் சூடு இடம் பெற்றதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பாடசாலை ஒன்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சில மணி நேர போராட்டத்தின் பின்னர் குறித்த நபரைRead More →