Reading Time: < 1 minuteகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உள்நாட்டில் நிலவும் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக, இந்தியா மீதான குற்றச்சாட்டுகளை பயன்படுத்திக்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பதவி விலகும் நிலையில் கனடா பிரதமர்கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக கோரிக்கை வலுத்துவருகிறது. எதிர்க்கட்சிகள், மக்கள் மட்டுமின்றி, அவர் சார்ந்த கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. கனடாவின் நிதி அமைச்சரான கிறிஸ்டினா ஃப்ரீலேண்டும் வீட்டு வசதித்துறை அமைச்சர் Sean Fraserம் பதவி விலகினார்கள். ட்ரூடோ கட்சித்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நயாகரா பகுதியில் நாய் ஒன்றை துப்பாக்கியால் சுட்ட நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒரு வயதான நாய் ஒன்று கொல்லப்பட்டுள்ளது. நாயகரா பிராந்திய பொலிசார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கைதுப்பாக்கி ஒன்றின் மூலம் குறித்த நாய் சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்த நாயை மீட்டு பொலிஸார் சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த நாய் உயிர் இழந்துRead More →

Reading Time: < 1 minuteவெஸ்ட் ஜெட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கல்கரியில் இருந்து ரொறன்ரோ நோக்கி பயணம் செய்ய விருந்த விமானத்தில் இவ்வாறு குறித்த பெண் குழப்பம் விளைவித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்ஜெட் விமான சேவைக்கு சொந்தமான 670 என்ற இலக்கத்தைக் கொண்ட விமானத்தில் பயணிக்கவிருந்த பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக இருக்க வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையை விடவும் அதிகமான பயணிகள் விமானத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடிய லிபரல் கட்சியின் தலைமை பதவியை பெற்றுக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் கார்னி முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மார்க் கர்னி கனடிய மத்திய வங்கி ஆளுநராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு பின்னணியில் அவர் லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கான முனைப்புகளில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எதிர்வரும் புதன்கிழமைRead More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முக்கிய கட்சிக் கூட்டமொன்றை இந்த வாரம் சந்திக்க உள்ளார். எதிர்வரும் புதன்கிழமை லிபரல் கட்சியின் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பிரதமர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென கட்சிக்குள் எதிர்ப்பலைகள் எழத் தொடங்கியுள்ளன. இவ்வாறான ஓர் பின்னணியில் முக்கியமான கட்சிக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஒட்டாவாவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு நிகழ்நிலை மூலமும் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரதமர் ட்ரூடோவிற்கு எதிராக கொன்சர்வேட்டிவ்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவில் புத்தாண்டு காலப் பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடத்தி 15 பேரை படுகொலை செய்த சந்தேக நபரின் கனடிய பயணம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நியூ ஓர்லானில் வாகனமொன்றை மக்கள் மீது மோதச் செய்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. தாக்குதல்தாரி கடந்த 2023ம் ஆண்டு ஜுலை மாதம் ஒன்றாரியோவிற்கு பயணம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த பயணம் தொடர்பிலும் அமெரிக்க புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்சுதீன் ஜாபர் என்றRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவையில் டிக்கட் இன்றி பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் உடல் கமராக்களுடன் அதிகாரிகள் கடமையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ரொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவைகளில் கடமையில் ஈடுபடுத்தப்படும் விசேட உத்தியோகத்தர்கள் இந்த உடல் கமராக்களை பயன்படுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகடந்த ஒன்பது மாதங்களாக பரீட்சார்த்த அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் குறித்த திட்டம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மது போதையில் வாகனம் செலுத்தியவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். ஒன்றாரியோவின் கிங்ஸ்டன் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வான் வண்டியொன்றை செலுத்தியவர் வீதியில் சென்ற சிறுவன் மீது வானை மோதியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாகனத்தில் மோதுண்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 57 வயதான சாரதி ஒருவரே இவ்வாறு மதுRead More →