Reading Time: 2 minutesமூன்று கூட்டாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று ஒன்பது ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னர் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திங்களன்று (06) தனது பதவி விலகலை அறிவித்தார். லிபரல் கட்சிக்கான மக்கள் ஆதரவு குறைந்து வருவதையும், பல முக்கிய இடைத்தேர்தல் தோல்விகளையும் காட்டிய பல மாத வாக்கெடுப்புகளுக்குப் பின்னர், ட்ரூடோ பதவி விலக அவரது கட்சிக்குள் பெருகிய அழுத்தத்தை எதிர்கொண்டார். இதற்கு மத்தியில் அவரது பதவி விலகல் வந்துள்ளது. தனதுRead More →

Reading Time: < 1 minuteகனடிய வருமானவரித் திணைக்களத்தால் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் மாற்றங்கள் Online App கள் மூலம் வருமானம் சம்பாதிப்பவர்களைப் பாதிக்கலாம் எனக் கூறப்படுகிறது. GIG பொருளாதாரம் என வர்ணிக்கப்படும் Uber Eats, Skip the Dishes, Fiverr போன்ற Online Apps மூலம் பணம் சம்பாதிப்பவர்களும் குறுங்கால ஒப்பந்தங்கள் (Short Term Contracts) மற்றும் பதியாமல் தற்காலிக வேலைகளைச் செய்பவர்களும் (freelance work / web designers / business consultancy /Read More →

Reading Time: < 1 minuteரொறோண்டோ வீட்டுச் சந்தை மீண்டுமொரு தடவை சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது என சந்தை அவதானிப்பாளர்கள் கருதுகின்றனர். பாவனையாளர்களின் கடன்பெறு தகமைகளைத் தரவுப்படுத்தும் நிறுவனமான எக்குவிஃபக்ஸ் (Equifax) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அடமானக் கடன்களைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் தவிக்கும் வீட்டுச் சொந்தக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த 9 வருடங்களின் பின் இந்நிலை ஏற்பட்டிருப்பதாக அது தெரிவித்துள்ளது. அதுவரை காலமும் அடமான வட்டி வீதம் வரலாற்றிலேயே மிகவும் குறைந்ததாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் எல்லை பகுதிக்குள் அத்து மீறி பிரவேசித்த சாரதி ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறு குறித்த நபரை கைது செய்துள்ளனர். அமெரிக்க எல்லை பகுதியிலிருந்து கனடிய எல்லை பகுதி பகுதிக்குள் குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்தார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரை கனடிய எல்லை பாதுகாப்பு முகவர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில வாகன இலக்கத் தகட்டைக்கொண்டRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க கனடிய எல்லை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். கனடாவின் கியூபெக் கிழக்கு பகுதியில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. மொன்றியலுக்கு தென்கிழக்காக சுமார் 672 கிலோ மீட்டர் தொலைவில் செயின்ட் ஆர்மெண்ட் பகுதியில் இரவு 8.30 மணி அளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. சாரதி பஸ்ஸின் கட்டுப்பாட்டை இழந்ததினால் இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்து வைத்திய சாலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ட்றூடோ தான் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவரது இடத்துக்கு கட்சி இன்னுமொருவரைத் தெரிவுசெய்யும்வரை காபந்து தலைவராக இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். தற்போது குளிர்கால விடுப்பில் இருக்கும் பாராளுமன்றம் ஜனவரி 27 ம் திகதி மீண்டும் கூடவிருந்ததெனினும் அதை எதிர்வரும் மார்ச் 24 ம் திகதி வரை ஒத்திவைக்கவிருப்பதாகவும் அதற்கான உத்தரவை அவர் ஆளுனரிடமிருந்து பெற்றிருப்பதாகவும் தெரிகிறது. 2013 முதல் மத்திய லிபரல் கட்சியின் தலைவராகவும் 2015 முதல் நாட்டின் பிரதமராகவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பிளாக்போலிங் (flagpoling) என்ற இந்த சந்தர்ப்பமானது கனடாவில் தற்காலிகமாக வதிபவர்கள் அமெரிக்கா கனடிய எல்லை பகுதிகளை கடப்பதற்கு உதவும் முறையாகும்.சந்தர்ப்பமொன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாக்போலிங் (flagpoling) என்ற இந்த சந்தர்ப்பமானது கனடாவில் தற்காலிகமாக வதிபவர்கள் அமெரிக்கா கனடிய எல்லை பகுதிகளை கடப்பதற்கு உதவும் முறையாகும். இதுவரை காலமும் அமெரிக்க மற்றும் கனடிய எல்லை பகுதியின் இந்த பிளாக்போலிங் அனுமதி வழங்கப்பட்டது.Read More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ தனது இராஜினாமாவை விரைவில் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவது குறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியிடுவார் எனகுளோப் அன்ட் மெயில் தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்து இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை இது குறித்து தீவிரமாக சிந்திக்கின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஒக்டோபரில் கனடாவில் தேர்தல்ஒன்பது வருடகாலம் கனடா பிரதமராகRead More →