காலிஸ்தான் பயங்கரவாதி எதிராக வன்முறையை தூண்ட இந்திய உள்துறை மந்திரி அமித் ஷா Amit Shah திட்டமிட்டுள்ளதாக கனடா மந்திரி டேவிட் மோரிசன் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம்சாட்டிருந்தார்.
இதற்கு இந்திய அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இப்படி தொடர்ச்சியாக இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு உள்நாட்டிலும் உலக நாடுகள் மத்தியிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில்,
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவிருக்கும் தேர்தலில் காணாமல் போய்விடுவார்” எனக் கூறியுள்ளார்.
கனடாவில் 2025 யில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எலான் மஸ்க் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.