Reading Time: < 1 minute

கனடா 2023 – 2025ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தை வெளியிட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் 500,000 புதிய புலம்பெயர்வோரை வரவேற்க கனடா திட்டம் வைத்துள்ளது சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

கனடா 2023 – 2025ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தை இப்போதுதான் வெளியிட்டுள்ளது

அதன்படி, 2023இல் 465,000 புதிய புலம்பெயர்ந்தோரை கனடா வரவேற்க உள்ளது.

2024இல் அந்த எண்ணிக்கை சற்றே உயர்ந்து, 485,000 புதிய புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட உள்ளார்கள்.

2025இன் இலக்கு மேலும் அதிகரித்து, 500,000 புதிய புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வரவேற்கப்பட உள்ளார்கள்.

இந்த புலம்பெயர்தல் மட்ட திட்டம் என்பது, கனடா ஆண்டுதோறும் எத்தனை புதிய புலம்பெயர்ந்தோரை வரவேற்க உள்ளது என்பதைக் காட்டும் ஒரு வழிகாட்டு நெறிமுறையாகும்.

எக்ஸ்பிரஸ் நுழைவு திட்டத்தின் கீழ் வரவேற்கப்படும் புதிய புலம்பெயர்ந்தோர் இலக்கு அதிகரிக்க உள்ளது.

2023இல் 82,880 பேரும்,

2024இல் 109,020 பேரும்,

2025இல் 114,000 பேரும் இத்திட்டத்தின் கீழ் வரவேற்கப்பட உள்ளார்கள்.

மாகாண நாமினி திட்டத்தின் கீழ் வரவேற்கப்படும் புதிய புலம்பெயர்ந்தோர் இலக்கும் அதிகரிக்க உள்ளது.

2023இல் 105,500 பேரும்,

2024இல் 110,000 பேரும்,

2025இல் 117,500 பேரும் மாகாண நாமினி திட்டத்தின் கீழ் வரவேற்கப்பட இருக்கிறார்கள்.

கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகள் திட்டத்தின் கீழ் சுமார் 80,000 பேரை வரவேற்க கனடா திட்டமிட்டுள்ளது.

பெற்றோர், தாத்தா பாட்டி திட்டத்தின் கீழ் கனடாவுக்கு வரவேற்கப்பட இருக்கும் புதிய புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, 2023இல் 28,500 ஆகவும், 2024இல் 34,000 ஆகவும், 2025இல் 36,000 ஆகவும் அதிகரிக்க உள்ளது.

அகதிகள் மற்றும் மனிதநேய வகுப்பு இலக்குகள் குறைய இருக்கின்றன.

அகதிகள் வகுப்பு இலக்கு, 2023 மற்றும் 2024இல் 76,000 ஆக உள்ளது. அது 2025இல் 72,750 ஆக குறைய உள்ளது.

அதேபோல, மனிதநேய வகுப்பு இலக்கும் 2023இல் 16,000 ஆக உள்ளது 2025இல் 8,000 ஆக குறைய உள்ளது.