சீக்கிய ஆன்மீகத் தலைவர் கொலையுடன் தொடர்பில்லை! ரஷ்யா
Reading Time: < 1 minuteசீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்தீப் சிங் நிஜாரின் கொலையுடன் தொடர்பு கிடையாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. கனடாவிற்கான ரஷ்ய தூதரகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் சீக்கிய ஆன்மீகத் தலைவர் நிஜார் படுகொலை செய்யப்பட்டிருந்தார். நிஜாரின் மெசென்ஜர் கணக்கினை ஹெக் செய்து அந்த தகவல்களை ரஷ்ய தூதரகம் இந்தியாவிற்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு இந்த குற்ச்சாட்டை சுமத்தியுள்ளது.Read More →