Reading Time: < 1 minuteகனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைப்பு குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை 54 வீதமாக குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசாங்கம் குடிவரவு கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை வரையறுப்பதற்கு தீர்மானித்து நடவடிக்கை எடுத்துள்ளது. எவ்வாறு எனினும் மத்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது பல்கலைக்கழகங்களை வெகுவாக பாதிக்கும்Read More →

Reading Time: < 1 minuteஆல்பர்ட்டா மாகாணம், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பணியாளர்களைக் கவர திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், உள்ளூர் தொழிலாளர் யூனியன் தலைவர்களை கவலைக்குள்ளாக்கியது. கனடாவின் CBC News ஊடகத்திற்குக் கிடைத்த மின்னஞ்சல் ஒன்றில், 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச பணியாளர் தேர்வுத் திட்டத்துக்காக, ஆல்பர்ட்டா மாகாணம், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பணியாளர்களைக் கவர திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. நவம்பர் 5 திகதியிடப்பட்ட அந்த மின்னஞ்சலிலிருந்து, ஆல்பர்ட்டா மாகாண புலம்பெயர்தல் மற்றும் பன்முகக் கலாச்சாரத்துறையின் ஆலோசகர் ஒருவர்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டோவா பகுதியில் பெண் ஒருவர் தனது மகனை காப்பாற்றுவதற்காக தீப்பற்றி எரிந்த வீட்டுக்குள் புகுந்து மகனை மீட்க முயற்சித்துள்ளார். 43 வயதான ஸ்டெப்னி மெக்டோவ் என்ற பெண்ணே இவ்வாறு தனது மகனை காப்பாற்றுவதற்காக வீட்டுக்குள் புகுந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 11 வயதான மகனை தீ விபத்திலிருந்து காப்பாற்றும் நோக்கில் இவ்வாறு துணிச்சலாக வீட்டுக்குள் புகுந்துள்ளார். எவ்வாறெனினும் தீ விபத்து காரணமாக இருவரும்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் குழுவான ஆவாவின் தலைவர் என கருதப்படும் பிரசன்னா நாகலிங்கம் கொலை குற்றச்சாட்டு மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரான்சிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கின்றார். இலங்கையிலிருந்து பிரான்சிற்கு தப்பியோடிய பின்னர் பிரசன்னா நாகலிங்கம் , இந்த வருடம் கனடாவில் கைதுசெய்யப்பட்டார். கனடாவின் நீதிதிணைக்களம் தகவல்இந்நிலையில் 2022 செப்டம்பரில் அபிராமன் பாலகிருஸ்ணன் என்பவரை கொலை செய்தமை தொடர்பிலும் மற்றைய ஒருவரை காயப்படுத்தியமை தொடர்பிலும் பிரசன்னாவைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ கிழக்கு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு முதலுதவி செய்யப்பட்ட போதிலும் உயிர் காப்பு முயற்சிகள் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்திய துப்பாக்கியும் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தினால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாதுRead More →

Reading Time: < 1 minuteமிஸ்ஸிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். டக்ஸி வண்டியொன்று மின் கம்பம் ஒன்றில் மோதுண்ட காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மிஸ்ஸிசாகாவின் வுல்ப்டேல் மற்றும் சென்ட்றல் வீதி என்பனவற்றிற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 25 வயதான நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த வாகனத்தில் ஒருவர் பயணம் செய்துள்ளார் எனவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியில்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் எதிர்வரும் 2025ம் ஆண்டில் வீடுகளின் விலைகள் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இவ்வாறு வீடுகளின் விலைகள் உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. றோயல் லீபேஜ் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டு நான்காம் காலாண்டு பகுதியில் வீடுகளின் விலைகள் ஐந்து வீதத்தினால் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சராசரியாக வீடுகளின் விலைகள் 1225770 டொலர்களாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நகையகமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவின் மார்க்கம் பகுதியில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சுத்தியல்களைக் கொண்டு நகையகத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணொளிகள் மூலம் கொள்ளை முயற்சி மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் பத்து பேர் வரையில் இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இணைய வழியிலான மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 12 மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருட்களை கொள்வனவு செய்வார்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய வழியூடாக விளம்பரம் செய்து விற்பனை செய்யும் போது அதிக அளவிலான கொள்ளைச் சம்பவங்களும் மோசடிகளும் இடம் பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இவ்வாறான கொள்ளை மற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்பில் கூடுதல் முறைப்பாடுகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நான்கு பேரை கொண்ட குடும்பம் ஒன்று அடுத்த ஆண்டில் உணவிற்காக கூடுதல் செலவை மேற்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் நாளுக்கு நாள் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது அடுத்த ஆண்டில் நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று 800 டாலர்கள் மேலதிகமாக உணவிற்காக செலவழிக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், டெல் ஹோஸ்Read More →