Reading Time: < 1 minuteகனடாவில் இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கல்கரி பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு கொலைகளுடன் தொடர்புடைய ஆபத்தான நபர் என பொலிஸார் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 38 வயதான பெனடிக் கமின்ஸி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கமின்ஸி தனது வாகனத்திற்கு அருகாமையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த நபர் கடந்த காலங்களில் குற்றச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபரின் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது. கனடாவின் ஹமில்டன் பகுதியில் இந்த வங்கிக் கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது. மொன்றியல் வங்கியின் கிளையொன்றில் புகுந்த நபர் ஒருவர் வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளார். துப்பாக்கி இருப்பதாகக் கூறி குறித்த வங்கிப் பணியாளரை அச்சுறுத்தியுள்ளார். இதன் போது சக வங்கிப் பணியாளர்கள் குறித்த கொள்ளையரை தடுக்க முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது கொள்ளையரினால் பணம் கொள்ளையிடRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கப்பம் கோரல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரொறன்ரோ பகுதியில் இவ்வாறான கப்பம் கோரல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலைபேசிகளுக்கு வன்முறையான படங்களை அனுப்பி அதன் மூலம் அச்சுறுத்தல் விடுத்து பணம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவிலிருந்து தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக கப்பம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் அணுக்கக் குறியெண் 470 மற்றும் 404 ஆகியனவற்றினை அடிப்படையாகக் கொண்ட எண்களிலிருந்து அழைப்பு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வின்ட்ஸோர் (Windsor) பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 71 வயதான பெண் ஒருவரே இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. வின்ட்ஸோர் சான்ட்விட்ஜ் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இந்த தீ விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக வின்ட்ஸோர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்திற்கான காரணங்கள் எதுவும்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் எதிர்வரும் ஆண்டில் உணவு வங்கிகளின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான கனடியர்கள் உணவு பாதுகாப்பின்மையை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஒன்றாறியோ மாகாணம் முழுவதும் நிறுவப்பட்டு உள்ள உணவு வங்கிகளில் அதிக அளவான மக்கள் பயன் பெறுவதற்காக முயற்சிப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோவில் அமைந்துள்ள டெய்லி பிரட் புட் பேங்க் என்ற உணவு வங்கியில் கடந்த ஆண்டில் 3.75 மில்லியன் மக்கள் பயன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெருந்தொகை கொக்கேய்ன் போதை பொருளுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிழக்கு ஒன்றாறியோ பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். ஸ்காப்ரோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரிடமிருந்து சுமார் 50000 டொலர்கள் பெறுமதியான கொக்கேய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபரிடமிருந்து சுமார் 500 கிராம் இடையினுடைய கொக்கேய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மேற்கு கியூபெக் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 4.1 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய நில அதிர்வு நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை ஒட்டோவா மற்றும் கேடின்யூ ஆகிய பகுதிகளிலும் உணர முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நில அதிர்வு காரணமாக சேதங்கள் ஏதும் ஏற்பட்டு இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 5 ரிச்ட்ர் அளவிற்கு மேற்பட்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இணய வழியிலான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இவ்வாறு அதிக அளவு சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பின்னர் நாட்டில் அதிக அளவான இணைய வழி சிறுவர் துஷ்பியோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிள்ளைகள் அதிக நேரத்தை இணயத்தில் செலவிடுவதனால் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டு முதல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கார் மற்றும் ரயில் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் மொன்றியால் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் அதிகாலை வேளையில் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரயில் மோதுண்ட வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றதாகவும், பின்னர் வாகனத்திற்கு அருகாமையில் வந்த போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் காயமைடைந்துள்ளனர். எனினும் காயமடைந்த இருவருக்கும் உயிராபத்து கிடையாதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மளிகை பொருட்களின் விலைகள் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் மளிகை பொருட்களின் விலைகள் மூன்று தொடக்கம் ஐந்து வீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கியூபெக் மாகாணத்தில் இந்த விலை அதிகரிப்பானது ஐந்து வீதமாக காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கனடிய உணவு விலை அறிக்கை இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளது.Read More →