Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் தெற்காசிய சமூகத்தை தூற்றும் வகையில் அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த நபர் கத்தியுடன் தெற்காசிய சமூகத்தவர்களை அச்சுறுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த குற்ற செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் தேடி வருவதாகவும் அந்த நபரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ரொறன்ரோ மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்கள் பொலிஸார் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்துRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் தீயணைப்புப் படையினருக்கு விசேட சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழில் இடத்தில் பாதுகாப்பு மற்றும் காப்புறுதி நலன் என்பனவற்றை அதிகளவில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினர் பல்வேறு தியாகங்களை செய்வதாகவும் அவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை விடவும் தீயணைப்பு படையினர் அதிகளவில் புற்று நோய்களினால் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே தீயணைப்புப் படையினருக்கு புற்று நோய்களுக்கான சுகாதார காப்பீடுகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானதுRead More →

Reading Time: < 1 minuteகல்கரியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் இரண்டு தீயணைப்புப் படைவீரர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கல்கரியின் தென்கிழக்கு பகுதியில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. சில வீடுகள் தீப்பற்றிக்கொண்டதாக தீயணைப்புப் படையினருக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீ விபத்தின் போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொதுமக்களும் இரண்டு தீயணைப்புப் படைவீரர்களும் காயமடைந்துள்ளனர். வீடுகளில் தங்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியின் போது இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். கனடாவின் வின்னிபெக் வடக்கு மானிடோபா பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயுதத்துடன் இருந்த சிறுவனே, பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளான். சம்பவத்தில் காயமடைந்த 17 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளான். கூரிய ஆயுதமொன்றுடன் மக்களுக்கு தீங்கிழைக்கும் வகையில் செயற்பட்ட சிறுவனை சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த விடயம் நினைவிருக்கலாம். இந்நிலையில், அந்தக் குடும்பம் உட்பட புலம்பெயர்வோர் பலரை அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய இருவர் வழக்கில் இரண்டுபேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. 2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39),Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் – ஸ்காப்ரோ பகுதியில் இலங்கை அரியாலையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் ஆயுதம் ஒன்றினால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். யாழ் அரியாலையை பூர்வீகமாகக் கொண்ட 66 வயதுடைய மதிசூடி குலத்துங்கம் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Finch & McCowan பகுதியில் உள்ள 34 Whitney Castle Crescent இல்லத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை (Nov 20, 2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று இரவுRead More →

Reading Time: < 1 minute2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் பிரபலமான இடமாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. ஃப்ளாஷ் பேக் சர்வே இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகளில், ஜப்பானுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. மேலும், பின்லாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2024 ஃபிளாஷ் பேக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கை 04 வது இடத்தில் உள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரம்டனில் கார் கொள்ளையில் ஈடுபட்டதாக சிறுமிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு சிறுமிகள் உள்ளிட்ட நானுக்கு பேருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வன்முறையான முறையில் கார் கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். கார் உரிமையாளரை ஏமாற்றி தம்மை சந்திக்க வருமாறு அழைத்துச் சென்று வாகனத் தரிப்பிடத்தில் வைத்து தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவரின் வாகனம், அலைபேசி மற்றும் பணப்பை என்பனவற்றை நான்கு பேர் கொள்ளையிட்டுச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தற்பொழுது அறவீடு செய்யப்பட்டு வரும் பொருட்கள் சேவைகள் வரி குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆளும் லிபரல் கட்சியும் என்.டி.பி கட்சியும் இது தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் புத்தாண்டு, நத்தார் பண்டிகையை காலப்பகுதியில் கனடிய நுகர்வோருக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. சுமார் இரண்டு மாத காலத்திற்கு இவ்வாறு வரி சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் வாழ்க்கைச் செலவுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரம்டன் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் ஒரு நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த மாதம் ஆரம்பத்தில் குறித்த துப்பாக்கிச் சூட்டை சம்பவம் குயின்ஸ் வீதிக்கு அருகாமையில் இடம் பெற்றிருந்தது. இந்த சம்பவத்தில் 37 வயதான ஸ்டர்லிங் சில்வெஸ்டர் என்ற நபர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்Read More →