Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு அபாயகரமானது என கனடா தெரிவித்துள்ளது. கனடா மேக்சிகோ ஆகிய நாடுகள் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என என்ற யோசனையை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். ட்ரம்பின் இந்த யோசனையானது கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தை மிக மோசமாக பாதிக்கும் என முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். இதனால் கனடிய ஒன்றாறியோ மாகாண ஏற்றுமதி துறை பெரும் பின்னடைவை எதிர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடுடைப்பு சம்பவமொன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏழு பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 13 வயதான சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வோகனில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளையிடுவதற்காக களவாடப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் 13 முதல் 18 வயது வரையிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் 81 வயதான முதியவர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை குறித்த நபர் கொலை செய்துள்ளார். தனது மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட முதியவருக்கு கியூபெக் நீதிமன்றம் பத்து ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 81 வயதான கிலிஸ் பிரிசார்ட் என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். 79 வயதான லிவிஸ்கியூ என்ற தனது மனைவியை பிரிசார்ட்Read More →

Reading Time: < 1 minuteகனடிய தபால் திணைக்களம் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தபால் திணைக்களப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக போட்டி நிறுவனங்களிடம் சேவை பெற்றுக்கொள்ள மக்கள் உந்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 8 மில்லியன் பொதிகள் வேறும் சேவைகள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கனடிய தபால் திணைக்களம் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழிற்சங்கப் போராட்டம்Read More →

Reading Time: < 1 minuteகனடா மான்ட்ரியல் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறி வாகனங்களுக்கு தீவைப்பு மற்றும் உருவ பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில் அதேநாளில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்னொரு பகுதியில் பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் கச்சேரியில் பங்கேற்று இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இந்த இசை நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் கலந்துகொண்டார். டெய்லர் ஸ்விப்ட் கச்சேரியில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரம்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேனில் பயணம் செய்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வாகனங்கள் பந்தயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteராமேஸ்வரம்- தலைமன்னார் ஆகியவற்றுக்கிடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் முதற் கட்டமாக 150 பயணிகள் செல்லும் வகையில் கப்பல் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டிணம் முதல் காங்கேசன்துறை வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இறங்கு தளம், பயணிகள் தங்குமிடம், சுங்கRead More →

Reading Time: < 1 minute30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஏர் அமெரிக்கா விமானத்தின் கதவை கனேடிய பயணி ஒருவர் திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மில்வாக்கியில் இருந்து டல்லாஸ் நோக்கி பயணித்த விமானத்திலேயே பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. மனநல மருத்துவரிடம் அனுப்பப்பட்ட பயணிவிமானம் பறந்து கொண்டிருந்த போது, ​​பயணி விமானப் பணிப்பெண்ணை அணுகி, உடனடியாக விமானத்தை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும், விமான பணிப்பெண் கோரிக்கையை மறுத்ததையடுத்து, அவர் பீதியடைந்து கதவைRead More →

Reading Time: < 1 minuteநயகராவில் நபர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் நயகராக சென் கதரீன்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திட்டமிட்ட அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டெனியல் டேல் என்ற நபருக்கு எதிராக இவ்வாறு கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்துடன் மற்றுமொருவர் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் குடியேறும் புதியவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிற்குள் புதிதாக வருவோர் ஏமாற்றப்படுவதனை தடுக்கவும் மோசடிகளில் சிக்குவதனை தவிர்க்கவும் இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பில் ஒன்றாரியோ அரசாங்கம் அண்மையில் தகவல் வெளியிட்டு இருந்தது. குடிவரவு பிரதிநிதிகள் என்ற பெயரில் புதிதாக நாட்டுக்குள் பிரவேசித்தவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும்Read More →