Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரி விதிக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதன் தொடர்ச்சியாக, கனடா அமெரிக்கா எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த கனடா அரசு முடிவு செய்துள்ளது. சமூக ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கையெழுத்திடும் முதல் ஆவணங்களில் ஒன்று, கனடா, மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் முதல் குரங்கமை நோய் பதிவாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவின் மானிட்டோபா பகுதியில் இவ்வாறு குரங்கம்மை நோயாளர் ஒருவர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் பொது மக்களுக்கு இந்த நோய் தொற்று பரவக்கூடிய அபாயங்கள் குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குரங்கமை நோயினால் பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மற்றும் மத்தியRead More →

Reading Time: < 1 minuteகனடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களின் உள்ளீர்ப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. உயர் கல்வித்துறை நிறுவனங்கள் சிலவற்றில் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் சில ஆட்குறைப்பு நடவடிக்கை தற்காலிகமானவை எனவும் சிலவை நிரந்தரமான ஆட்குறைப்பு நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்படுகிறது. லிபரல் அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதியை குறைத்துள்ளமைRead More →

Reading Time: < 1 minuteகனடாவிற்குள் புதிதாக குடியேறுவோருக்கு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை கொண்டு மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவை மையமாகக் கொண்ட சட்டத்தரணி என்ற போர்வையில் இந்த மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் குடியேற விரும்பும் இந்த மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சட்டத்தரணி போன்றே இந்த காணொளி உருவாக்கப்பட்டது. பிரபல குடிவரவு சட்டத்தரணி மெக்ஸ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் நான்கு மாத சிசுவை கொலை செய்ததாக அதன் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொலிஸார் இந்த பெண் மீது குறித்த கொலைக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். கடந்த வாரம் ரொறன்ரோவின் மிட்டவுன் பகுதியில் நான்கு மாத சிசுவொன்று கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. தனது நான்கு மாத குழந்தையை காணவில்லை என சிசுவின் தந்தை பொலிஸாரிடம் தொலைபேசி வழியாக முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கார் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரம்டன் பகுதியில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது போக்குவரத்து பஸ் ஒன்றுடன் மோதியுள்ளது. துப்பாக்கி முனையில் குறித்த bmw வாகனத்தை மடக்கி பிடித்து கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த களவாடப்பட்ட வாகனத்தில் ஐந்து பேர் பயணம் செய்தனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 33 வயதான அபிரா பொன்னய்யா, 19 வயதான காசீம்Read More →

Reading Time: < 1 minuteகனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்சட்டவிரோத குடியேற்றம் மற்றும் டிரக்ஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். ஜனவரி 20Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு அபாயகரமானது என கனடா தெரிவித்துள்ளது. கனடா மேக்சிகோ ஆகிய நாடுகள் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என என்ற யோசனையை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். ட்ரம்பின் இந்த யோசனையானது கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தை மிக மோசமாக பாதிக்கும் என முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். இதனால் கனடிய ஒன்றாறியோ மாகாண ஏற்றுமதி துறை பெரும் பின்னடைவை எதிர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடுடைப்பு சம்பவமொன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏழு பதின்ம வயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 13 வயதான சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வோகனில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளையிடுவதற்காக களவாடப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் 13 முதல் 18 வயது வரையிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் 81 வயதான முதியவர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை குறித்த நபர் கொலை செய்துள்ளார். தனது மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட முதியவருக்கு கியூபெக் நீதிமன்றம் பத்து ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 81 வயதான கிலிஸ் பிரிசார்ட் என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். 79 வயதான லிவிஸ்கியூ என்ற தனது மனைவியை பிரிசார்ட்Read More →

Reading Time: < 1 minuteகனடிய தபால் திணைக்களம் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தபால் திணைக்களப் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக போட்டி நிறுவனங்களிடம் சேவை பெற்றுக்கொள்ள மக்கள் உந்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 8 மில்லியன் பொதிகள் வேறும் சேவைகள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கனடிய தபால் திணைக்களம் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழிற்சங்கப் போராட்டம்Read More →

Reading Time: < 1 minuteகனடா மான்ட்ரியல் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறி வாகனங்களுக்கு தீவைப்பு மற்றும் உருவ பொம்மை எரிப்பு போன்ற சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில் அதேநாளில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்னொரு பகுதியில் பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் கச்சேரியில் பங்கேற்று இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இந்த இசை நிகழ்ச்சியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் கலந்துகொண்டார். டெய்லர் ஸ்விப்ட் கச்சேரியில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரம்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேனில் பயணம் செய்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வாகனங்கள் பந்தயத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →