Reading Time: < 1 minuteகனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கோவிலுக்குச் சென்றிருந்த இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுளது. இந்நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்களுடன், பணியில் இல்லாத பொலிசார் ஒருவரும் அந்த கலவரத்தில் பங்கேற்றது தெரியவந்துள்ளது. அந்த பொலிசாரின் பெயர் ஹரிந்தர் சோஹி (Harinder Sohi) என்பதாகும். சீருடை அணியாத ஹரிந்தர், கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பும் கூட்டத்தினருடன் நிற்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பீல் பிராந்தியத்தில் இடம் பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பீல் பிராந்திய போலீசார் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர். பிரம்டனில் இந்து ஆலயத்திற்கு எதிரில் இடம் பெற்ற போராட்டம் உள்ளிட்ட குறித்த பிராந்தியத்தில் இடம்பெற்ற பல்வேறு போராட்டங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். நகரின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது குறித்து நடவடிக்கைகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பாரிய அளவில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களையும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த காற்று மற்றும் கடும் மழை காரணமாக இவ்வாறு மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மின்விநியோகத்தை மீளRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் நியூ பிரவுன்ஸ்வீக் பிராந்தியத்தில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று தினங்களில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. பிரிட்ரிக்ஷன், அப்பர் செயின் ஜோன் ரிவர் வெலி ஆகிய பகுதிகளில் இவ்வாறு தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நியூ பிரவுன்ஸ்விக் பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவல்களை உறுதி செய்துள்ளது. நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் நோயாளர் எண்ணிக்கை வரையறுப்பதற்கு நடவடிக்கைRead More →

Reading Time: < 1 minute2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது. அதன் குடிமக்கள் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டது. குறித்த நாடுகளின் கடவுச்சீட்டினை கொண்ட மக்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெறலாம். அமெரிக்காRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நான்கு ஆண்டுகள் போலியாக தாதியாக கடமையாற்றிய பெண் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குறித்த பெண், தம்மை தாதியாக அடையாளப்படுத்தி வேலை செய்துள்ளார். சிம்கோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 33 வயதான ஹாய்லி ரொபர்ட்ஸ் என்ற பெண் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் டைனி டவுன்ஷிப் பகுதி சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2024Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நாணய குற்றிகளை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரிச்மண்ட் அபர்தீன் நிலையத்தில் இந்த நாணயக் குற்றி விற்பனை நடைபெற்றுள்ளது. வரையறுக்கப்பட்ட அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணயக் குற்றிகளை கொள்வனவு செய்வதற்கு இவ்வாறு மக்கள் காத்திருந்தனர். நாணய குற்றிகளை கொள்வனவு செய்ய அதிக கேள்வியை காணப்பட்டதனால் ஒருவருக்கு விற்பனை செய்யப்படும் நாணயக் குற்றிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாணய குற்றி விற்பனை செய்யும்Read More →

Reading Time: < 1 minuteஇந்திய அரசாங்கம், கனடாவிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக கனடிய அரசாங்கம் வெளியிட்ட கருத்து தொடர்பில் இவ்வாறு எதிர்ப்ப வெளியிடப்பட்டுள்ளது. சீக்கிய செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அமித்ஷா உத்தரவிட்டார் என கனடிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே கடுமையான முரண்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கனடிய அரசாங்கம் சுமத்திய இந்த குற்றச்சாட்டைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் லண்டனில் டாக்ஸி கட்டண அறவீடு தொடர்பிலான மோசடிகள் இடம் பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லண்டனை அண்டிய பகுதியில் வாழும் மக்கள் இந்த மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. டாக்ஸி கட்டணங்களை அறவீடு செய்யும் போது இவ்வாறு மோசடிகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் டாக்ஸி சாரதியாகவும் மற்றயவர் டாக்ஸியில் பயணம் செய்தவர் போன்றும் தோன்றி மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டெக்ஸி கட்டணம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களான ரொஜர்ஸ், பெல் மற்றும் டெலோஸ் ஆகிய நிறுவனங்கள் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் சேவையை வழங்கி வரும் இந்த நிறுவனங்கள் திடீரென கட்டண அதிகரிப்பை மேற்கொண்டு உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்களது மாதாந்த இணையம், தொலைக்காட்சி மற்றும் வீட்டு தொலைபேசிகளுக்கான கட்டணங்கள் எதிர்பாராத அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களைRead More →