Reading Time: < 1 minute கனடாவில் மீண்டும் ஒரு சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், 30 பேர் தாக்குதலை வேடிக்கை பார்க்க, இரண்டு சிறுவர்கள் மட்டும் துணிச்சலாக தாக்குதலைத் தடுத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Kelowna நகரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில், 13 வயது சிறுமி ஒருத்தி மீது ஐந்து பதின்ம வயதினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். விடயம் என்னவென்றால், இந்த சம்பவத்தை சுமார் 30 பேர் வேடிக்கைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ பகுதியில் 13 வயதான சிறுவன் ஒருவன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. 54 வயதான நபர் ஒருவரை இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த மாதம் 1ம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்கு மற்றும் ஜெயின் வீதிகளுக்கு இடையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது. கத்தி குத்துக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயேRead More →

Reading Time: < 1 minute கனடாவில் தனது பிள்ளைகளை கடத்திய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் கார்லிங்டன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தனது 3 மகன்களையும் இந்தப் பெண் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது மூன்று மகன்களையும் கடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த வாரம் சஸ்கட்ச்வான் பகுதியில் வைத்து குறித்த பெண்ணை போலீசார்Read More →

Reading Time: < 1 minute இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி (Korea Eximbank) இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தபோதே இந்த இணக்கப்பட்டினை வெளியிட்டனர். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவிகள் கடந்த 2022ஆம் ஆண்டு மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு சலுகை வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் இவ்வாறு சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார்பன் வரி மீள் கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளது. நீண்ட காலமாக கார்பன் வரி மீள்கொடுப்பனவு தொகை வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு இறுதியில் குறித்த தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் இது தொடர்பில் அறிவித்துள்ளார். கனடாவைச்Read More →

Reading Time: < 1 minute கனடா அரசு, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என கியூபெக் மாகாண பிரீமியர் வலியுறுத்தியுள்ளார். கியூபெக் மாகாண பிரீமியரான François Legault, கியூபெக் மாகாணத்தில் குடியமர்ந்துள்ளவர்கள் உட்பட, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை பெடரல் அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தற்போது கியூபெக்கில் வாழ்ந்துவரும், அகதி நிலை பெறக் காத்திருப்பவர்களில் பாதி பேரை, பிற மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் கூறியுள்ளார். ஒரு ஆச்சரியமளிக்கும் விடயம் என்னவென்றால்,Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மொன்றியால் பகுதியில் வங்கி கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மொன்றியலின் செயின்ட் லெனோட் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி இந்த வங்கி கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வங்கி ஊழியரை அச்சுறுத்தி, பணத்தைக் களவாடி வாகனம் ஒன்றில் இந்த நபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 36 வயதான நபர் இவ்வாறுRead More →

Reading Time: < 1 minute அமெரிக்கா துறைமுகப் பணியாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டமானது உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கனடிய வாடிக்கையாளர்களை அது மோசமாக பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துறைமுக பணியாளர்களின் போராட்டமானது பொருட்களுக்கான தட்டுப்பாட்டை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இது பொருட்களின் விலைகளை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரக்கறி வகைகள் பல வகைகள் போன்றன மட்டுமன்றி வாகனங்கள், இலத்திரனியல் சாதனங்கள் என்பனவும் இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில் துறைமுகப் பணியாளர்களின்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மிஸிஸாகா பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சென்ட்ரல் பார்க்வே மற்றும் ஜோன் டிரைவ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பீல் பிராந்திய பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த இடத்தில் துப்பாக்கிச் சூடு அல்லது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளது. விக்டோரியாவிற்கு தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறு தீவு ஒன்றில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 4ம் திகதி வரையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பயிற்சி நடவடிக்கைகளின் போது வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய தேசிய பாதுகாப்பு திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. நாள் தோறும் காலை 8.00 மணி முதல் மாலைRead More →